பாம்புகள் என்றாலே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைக்கும் வகையில், ஆப்பிரிக்காவின் காடுகளில் காணப்படும் ‘கேபூன் வைப்பர்’ வகை பாம்பு நேரடியாக குட்டிகளை ஈனும் அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் முட்டையிடும் பிரிவைச் சார்ந்தவை என்றாலும், அனகோண்டா மற்றும் போவா போன்ற சில இனங்கள் குட்டிகளை ஈனும் தன்மையைக் கொண்டுள்ளன.

ஆனால் இந்த கேபூன் வைப்பர் பாம்பு ‘ஓவோவிவிபரஸ்’ என்ற முறையில், தனது உடலினுள்ளேயே முட்டைகளை வளர்த்து, அவை முழு வளர்ச்சியடைந்தவுடன் மெல்லிய சவ்வுப் படலத்துடன் குட்டிகளாக வெளியேற்றுகிறது. கலிபோர்னியா உயிரியல் பூங்கா உரிமையாளர் ஜே புரூவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, இயற்கையின் விந்தையை உலகிற்கு பறைசாற்றுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)

“>

இந்த வகை பாம்புகள் ஒரு முறைக்கு 20 முதல் 60 குட்டிகள் வரை ஈனக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. பிறக்கும்போதே இரண்டு அங்குல நீளமுள்ள பற்களுடன் பிறக்கும் இந்த குட்டிகள், பிறந்த சில நிமிடங்களிலேயே தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளவும், வேட்டையாடவும் கூடிய தற்சார்பு நிலையைப் பெற்றுள்ளன.

உலகில் உள்ள பாம்புகளிலேயே மிக நீளமான நச்சுப்பற்களைக் கொண்டுள்ள இந்த கேபூன் வைப்பர், மிகவும் ஆபத்தான நஞ்சைக் கொண்டிருந்தாலும், பொதுவாக மந்தமான சுபாவம் கொண்டவை மற்றும் மனிதர்களைத் தேவையின்றித் தாக்குவதில்லை. இந்த அரிய பிறப்பு நிகழ்வைக் காட்டும் வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.