இந்தியர்களின் கைதேர்ந்த ‘ஐடியா’ எனப்படும் மாற்று யோசனைகளுக்கு அளவே இல்லை என்பதற்குச் சான்றாகப் பீகாரிலிருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாகச் சோலார் பேனல்கள் சூரிய ஒளியில் மட்டுமே மின்சாரத்தைத் தயாரிக்கும் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர், சூரியன் மறைந்த பிறகு ஒரு குச்சியில் தீயைப் பற்றவைத்து, அந்த நெருப்பை சோலார் பேனலுக்கு அருகில் காட்டுகிறார். ஆச்சரியப்படும் விதமாக, அந்த நெருப்பின் வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்ட சோலார் பேனல், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை எரிய வைக்கிறது.
View this post on Instagram
சூரிய ஒளிக்கு மாற்றாக நெருப்பைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்த எளிய வித்தை தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியா கத்துக்குட்டிகளுக்கான இடமல்ல” (India is not for beginners) என வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். “மின்சாரக் காரை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரைப் பயன்படுத்துவது போல இது இருக்கிறது” எனச் சிலர் கிண்டல் செய்தாலும், அந்த இளைஞரின் சமயோசித புத்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
“இந்தத் திறமை இந்தியாவை விட்டு வெளியே போய்விடக் கூடாது” என்றும், “இந்தியர்களின் திறமை அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அறிவியல்படி ஒளி ஆற்றல் (Light energy) இருந்தால் சோலார் பேனல் வேலை செய்யும் என்ற தத்துவத்தை அந்த இளைஞர் மிக எளிதாக நிரூபித்துக் காட்டியுள்ளார்.
