தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் செவிலியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றக் கோரி கடந்த வாரம் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, செவிலியர்களுடன் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதற்கட்டமாக 1,000 செவிலியர்களை வரும் பொங்கல் பண்டிகைக்குள் பணி நிரந்தரம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பல ஆண்டுகளாகப் பணி பாதுகாப்பு இல்லாமல் தவித்த செவிலியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் ஒரு நிஜமான திருவிழாவாக அமையப்போகிறது. யார் முதலில் வேலைக்குச் சேர்ந்தார்களோ, அந்தப் பணி மூப்பு (Seniority) அடிப்படையில் இந்தப் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளது. அதாவது, அதிக காலம் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மீதமுள்ள செவிலியர்களுக்கும் எதிர்காலத்தில் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் செவிலியர்களின் நீண்ட காலப் போராட்டம் ஒரு நல்ல முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்ற வழிவகை ஏற்பட்டுள்ளது.