சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காதலியின் பிறந்தநாளுக்காக அவரது காதலன் மிகுந்த சிரத்தையுடன் அறையை பலூன்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்து ஆச்சரியப்படுத்தினார். தொடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்ட இந்த கொண்டாட்டம், கேக் வெட்டியவுடன் பெரும் கலவரமாக மாறியது. காதலி கேக்கின் முதல் துண்டை தனது காதலனுக்குத் தராமல், அருகில் இருந்த தோழிக்கு ஊட்டிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், விருந்தினர்கள் முன்னிலையிலேயே தான் செய்த அலங்காரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் இந்தச் செயல் மிகவும் “நச்சுத்தன்மையானது” என்றும், கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாத அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
“>
அதே சமயம், இவ்வளவு மெனக்கெட்டு விழாவை ஏற்பாடு செய்த ஒருவரை மதிக்காமல் காதலி நடந்துகொண்டது தவறு என்றும், அது காதலனை உணர்ச்சி ரீதியாக காயப்படுத்தியிருக்கும் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அன்பான தருணமாகத் தொடங்கிய அந்தப் பிறந்தநாள் விழா, இறுதியில் ஒரு கசப்பான சம்பவமாக முடிந்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
