சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, தாயின் ஈடு இணையற்ற அன்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பத் தயாராக இருக்கிறான்.

அப்போது, அவனது தாய் ஓடிவந்து வாகனத்தில் அமர்ந்திருக்கும் அவனுக்குத் தனது கையாலேயே உணவை ஊட்டி விடுகிறார். தான் கிளம்பும் அவசரத்தில் இருந்தாலும், தனது தாய் ஊட்டும் உணவைச் சிறுவன் ரசித்துச் சாப்பிடுவதும், கடைசியாகக் கையசைத்து முத்தங்களைப் பரிமாறிக் கொண்டு பிரிவதும் பார்ப்பவர்களின் கண்களைக் கலங்கச் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், தங்களுக்கு வயதானாலும் தங்கள் பெற்றோரின் முன்னால் என்றும் குழந்தைகள்தான் என்பதை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 🌷 (@rakshyyyyyyyy)

“>

“எனக்கு 30 வயதாகிறது, இன்றும் நான் அலுவலகத்திற்குத் தாமதமாகும்போது என் தாய் இப்படித்தான் ஊட்டிவிடுவார்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “சுயநலமான இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பைத் தருவது தாய் மட்டுமே” என்று பலரும் இந்த வீடியோவிற்கு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.