மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில், தங்கள் விருப்பத்திற்கு மாறாக வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே இறந்ததாகக் கருதி அவரது பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேலும் தனது குடும்பத்தினர் எதிர்த்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர் தங்களுக்கு மகளே இல்லை என்று கூறி, முறைப்படி ஈமச்சடங்குகளைச் செய்தனர். இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
मध्य प्रदेश –
विदिशा में 23 वर्षीय सविता कुशवाह लापता हो गई। पुलिस ढूंढकर लाई तो उसने फैमिली संग जाने से मना कर दिया। वो बॉयफ्रेंड संजू मालवीय से शादी कर चुकी थी।फैमिली ने आटे से सविता का प्रतीक स्वरूप पुतला बनाया। उसे अर्थी पर लेटाया। गाजे–बाजे से अंतिम यात्रा निकाली। फिर… pic.twitter.com/GiHoCEvlQF
— Sachin Gupta (@SachinGuptaUP) December 21, 2025
“>
இந்நிலையில் பெற்றோரின் சம்மதமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டதாகக் கருதிய குடும்பத்தினர், துக்க ஊர்வலத்தை நடத்தி, இறுதிச்சடங்கு முறைகளை முழுமையாகப் பின்பற்றினர். சமூகத்தின் பார்வையில் தங்கள் மகளை ஒரு ‘இறந்த ஆன்மாவாக’ கருதுவதாகவும், இனி அவருக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து உணர்ச்சிகரமான மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சம்பவம், நவீன காலத்தில் காதல் திருமணங்கள் எதிர்கொள்ளும் கடுமையான எதிர்ப்புகளை மீண்டும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
