சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ, காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் தனது வீட்டின் வாசலில் சாதாரணமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மிக அதிவேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பயங்கரமான சூறாவளி அந்தப் பகுதியைத் தாக்குகிறது.

மேலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பெண்ணை காற்று அப்படியே சுருட்டி ஆகாயத்தில் தூக்கிச் செல்கிறது. இயற்கையின் கோரத் தாண்டவத்தைக் காட்டும் இந்தக் காட்சி, பார்ப்பவர்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ஏபிபி செய்திகள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பலத்த காற்று வீசும்போது மக்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி.

இந்தப் பெண்ணின் நிலை என்னவானது என்பது குறித்த கவலையில் சமூக வலைதளவாசிகள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதர்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.