இந்திய விமானி ஒருவர் தனது மகனை முதல்முறையாகத் தனது விமானத்தில் அழைத்துச் செல்லும் மனதைக் கவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘அகஸ்தியா’ என்ற அந்தச் சிறுவன், தனது தந்தையைப் போலவே விமானி சீருடை அணிந்து மிடுக்காக விமான நிலையத்திற்குள் நுழையும் காட்சிகள் பார்ப்போரை நெகிழச் செய்கின்றன.
மேலும் தனது தந்தையின் பணியிடத்தை வியப்புடன் பார்க்கும் அந்தச் சிறுவனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து அந்த விமானி கூறுகையில், தனது மகனை முதல்முறையாகத் தான் இயக்கும் விமானத்தில் ஏற்றிச் சென்றது “மகிழ்ச்சியின் உச்சம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இந்த விமானத்தின் காக்பிட் முதல் பயணிகள் பகுதி வரை தனது தந்தையுடன் அந்தச் சிறுவன் வலம் வந்த காட்சிகள், ஒரு தந்தையின் பெருமையையும் மகனின் ஆச்சரியத்தையும் அழகாகப் படம்பிடித்துள்ளன. “தந்தையைப் போலவே மகன்” என்று பலரும் இந்தக் காணொளியைப் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.
