தாய்லாந்து கடற்கரையில் இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த பெண்களுடன் செல்பி எடுக்கும்போது அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பெண்களின் தனிமனித இடைவெளியை மீறி, அத்துமீறி நடந்து கொண்ட விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் செயல் வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் மீதான நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஒரு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெண்களின் கண்ணியத்தை மதிக்க வேண்டியது ஒவ்வொரு பயணியின் கடமை என்பதை வலியுறுத்தி வரும் மக்கள், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்தியர்கள் குறித்த தவறான பிம்பத்தை உலக அளவில் உருவாக்கிவிடும் எனப் சமூக வலைதளங்களில் கவலைகள் பகிரப்பட்டு வருகின்றன.
