இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போவைச் சந்தித்தபோது எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோம் நகரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, சுமார் 6 அடி 8 அங்குல உயரமுள்ள அதிபர் சாப்போவின் பிரம்மாண்ட உருவத்தைக் கண்டு மெலோனி ஒரு கணம் திகைத்துப்போனார்.

மேலும் சுமார் 5 அடி 2 அங்குல உயரமுள்ள மெலோனி, தன்னைவிட ஒன்றரை அடிக்கும் மேல் உயரமாக இருந்த அதிபரை அண்ணாந்து பார்த்து வியந்ததும், பின்னர் புன்னகைத்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது. இத்தாலியப் பிரதமரின் இந்த இயல்பான ரியாக்‌ஷன் நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

“>

இந்தச் சந்திப்பின் போது இரு தலைவர்களையும் ஒரே பிரேமில் புகைப்படம் எடுப்பது புகைப்படக் கலைஞர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இருவருக்கும் இடையே இருந்த அதிகப்படியான உயர வித்தியாசத்தைச் சரிசெய்ய, பல புகைப்படக் கலைஞர்கள் தரையில் அமர்ந்தும் படுத்தும் விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது.

இத்தகைய கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட அதிபர் சாப்போ, உலகின் மிக உயரமான அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர்களின் இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான விவாதங்களை உருவாக்கி வருகின்றன.