திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
#NewsUpdate | நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து விபத்து#SunNews | #Nellai | #RoadAccident pic.twitter.com/jgeapJVMry
— Sun News (@sunnewstamil) December 16, 2025
இந்த விபத்தில், வேனில் பயணித்த தனியார் ஆலை ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். மேலும், வேன் மோதியதில் குறுக்கே வந்த அந்த பசுமாடு உயிரிழந்தது.
