சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை ஏதோ பேச்சுக் கொடுத்துத் திசை திருப்பி யாரும் கவனிக்காத நேரத்தில் கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொண்டு சாமர்த்தியமாகத் தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது.
மதுரவாயல்: கடை உரிமையாளர் கண் முன்பே கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!#Maduravoyal | #Theft | #CCTV pic.twitter.com/28GfPLUWz4
— PttvOnlinenews (@PttvNewsX) December 16, 2025
இந்தச் சம்பவம் குறித்துக் கடை உரிமையாளர் அளித்தப் புகாரின் பேரில், மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
