சமூக ஊடகங்களில் தற்போது ஒரு காணொலி வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு கிராமப்புறப் பெண்மணி தன் குழந்தைகளை நடத்துவது போல, குரங்குகளுக்கு உணவு ஊட்டும் காட்சி இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது. அடுப்பில் சப்பாத்திகளைச் சுட்டுக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைச் சுற்றி மூன்று குரங்குகள் அமர்ந்து, உணவுக்காகக் காத்திருக்கின்றன.
அப்போது, “கொஞ்சம் இருங்கள், சப்பாத்தி சூடாக இருக்கிறது, பாருங்கள் எவ்வளவு ஆவி வருகிறது” என்று குரங்குகளிடம் பாசத்துடன் பேசி, அவற்றின் அவசரத்தைத் தணிக்கிறார். சப்பாத்தியை இரண்டு துண்டுகளாக உடைத்து, ஆறிய பிறகு வாயால் ஊதி, குளிர்வித்த பின் குரங்குகளுக்கு உணவளிக்கிறார்.
This is Bharatiya Sabhyata. She’s not just handing out hot rotis to monkeys; she is blowing air into them to cool them down so the monkeys’ tongues won’t get burned. This is how Bhuta Yajna mentioned in Bhagavad Gita, Manusmriti and other Sanskrit texts is performed. pic.twitter.com/rFGCZGU5Gn
— Sahana Singh (@singhsahana) December 16, 2025
அந்தப் பெண்மணியின் பேச்சைக் கேட்டு அந்தக் குரங்குகளும் பொறுமையாக உணவைப் பெற்றுச் சாப்பிடும் காட்சி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான ஆழ்ந்த அன்பு மற்றும் அன்யோன்யத்தைக் காட்டுவதால், பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தக் காணொலியைக் கண்ட இணையவாசிகள் பலர், இதுதான் இந்தியப் பண்பாடு என்றும், இங்கு விலங்குகளைக்கூட குடும்ப உறுப்பினர்களாகக் கருதுகிறோம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரக்கமும் அன்பும் சம்பிரதாயங்களைத் தாண்டிய ஒன்று என்றும், சிறிய உயிரினங்களிடம் கூட இரக்கம் காட்டுவது, நம் கலாச்சாரத்தின் வேர்களைப் பிரதிபலிக்கிறது என்றும் பலரும் அந்தப் பெண்மணிக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
