பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், ரவி குலாதி என்ற நபர் தனது மனைவி ஹாமினி மீண்டும் வேறொரு ஆணுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டிலேயே அவரது மனைவி வேறு ஒருவருடன் ஹோட்டலில் பிடிபட்டபோது, குழந்தைகளின் நலன் கருதி ரவி மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

ஆனால், மனைவி மீது சந்தேகம் நீடித்ததால், ரவி குலாதி தனது மனைவியின் ஸ்கூட்டியில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி அவர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில், ரவியின் மனைவி ஸ்கூட்டியில் வெளியே புறப்பட்ட நிலையில், அவர் பலமுறை போன் செய்தும் எடுக்காததால், ரவி ஜி.பி.எஸ் கருவியைப் பரிசோதித்துள்ளார்.

அந்தக் கருவி ஒரு ஹோட்டலைக் காட்டியதால், அங்குச் சென்றுப் பார்த்த ரவி, தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் மீண்டும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

அவருடன் இருந்தவர், ஏற்கெனவே அவரது வீட்டிற்கு மருமகளின் சகோதரர் என்று கூறி வந்துபோனவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது மருமகள் இனி ரவியுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டதாகவும், அவரது பெற்றோர் இப்போதுப் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாகவும் ரவியின் தந்தை பர்வேஷ் குலாதி தெரிவித்துள்ளார்.