மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) மோசடி நடப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டிப் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அதற்கு நேர்மாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பாராமதி தொகுதி எம்.பி.யான சுப்ரியா சுலே, “இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் நான் நான்கு முறை வெற்றி பெற்றேன்.
எனவே, அந்த இயந்திரம் குறித்து நான் கேள்வி எழுப்ப மாட்டேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராகப் பேசி வரும் ராகுல் காந்திக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பாஜக தேர்தல் ஆணையத்தைத் தங்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், இது ஜனநாயகத்தைப் பாதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
