பெங்களூருவில் 21 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் ஒரு ஓட்டலில் விருந்து கொண்டாடினார். அதிக சத்தமாகப் பாட்டுப் போட்டதால், அக்கம் பக்கத்தினர் புகாரளித்தனர். இதையடுத்து ஓட்டலுக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொடுக்காவிட்டால் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர்.

போலீசாரின் இந்த மிரட்டலால் பயந்துபோன அந்த இளம்பெண், தான் தங்கியிருந்த அறையின் பால்கனியிலிருந்து கீழே குதித்தார். இதில் இரும்பு கம்பியில் சிக்கி அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணம் பறிக்க முயன்ற போலீசார் குறித்து இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், எச்.ஏ.எல். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.