திமுக கட்சியின் எம்எல்ஏ துரை சந்திரசேகர். இவர் தஞ்சை ஒரத்தநாடு அருகே தன்னுடைய காரில் இன்று சென்று கொண்டிருந்தார். இவர் தென்னமநாடு என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கோவிந்தராசு என்பவரது பைக் மீது எம்எல்ஏ கார் மோதி உள்ளது.

இதில் கோவிந்தராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த விபத்தின் போது எம்எல்ஏ துரை சந்திரசேகர் காருக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பைக்கில் சாலையைக் கடக்கும் முயன்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.