கிழக்கு டெல்லி மான்சரோவர் பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகக் கோவிலில், பூசாரியின் மனைவி குசும் சர்மா (48) கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று, யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த அஞ்சல் சக்சேனா என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், கோவிலின் பூசாரி தனது குடும்பத்திற்கு தீமை செய்ய நினைப்பதாக கருதியதால், தற்காப்புக்காக அவரது மனைவியை கொலை செய்ததாக அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவர் அரிவாளை வாங்கி திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
மேலும் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
