விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான வாலிபர் மாரிமுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுத் துறையில் வேலை பார்க்கும் மாணவியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, மாரிமுத்து மாணவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிய மாணவியின் தாய், தனது வீட்டில் மாரிமுத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடம் தகராறு செய்துள்ளார்.
மகளிடம் விசாரித்தபோது, கடந்த ஒரு ஆண்டாக மாரிமுத்து காதலிப்பதாகக் கூறித் தன்னைத் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு நாள் திடீரெனக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன், அதை ரகசியமாகப் படம் எடுத்துத் தன்னை மிரட்டி வந்ததாகவும் மாணவி அழுதுள்ளார். இதையடுத்து, மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
