சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஒரு வீட்டில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்த நபர், வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் மோசடியாகப் பேசி கொள்ளையடித்துள்ளார். அந்த நபர், “உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கணவரும், குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்” என்று அந்தப் பெண்ணை பயமுறுத்தியுள்ளார்.
அதற்குப் பரிகாரமாக பூஜை செய்வதாக நம்ப வைத்து, அந்தப் பெண்ணின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார். இந்தச் சாமர்த்தியமான மோசடி மூலம், அந்தப் பெண்ணிடம் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹10,000 ரொக்கப் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பாலமுரளி என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
