சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே இன்று (டிசம்பர் 14) காலை விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரெனச் சாலைத் தடுப்பில் மோதி அப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 40 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்த போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
