கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடந்த கோவில் திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடிய ஒருவர் மற்றொரு சாமி ஆடியவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஏராளமானவர் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர்.
kanniyakumari | அருள் வந்து ஆடிய நபரை… அருள் வந்து இன்னொரு நபர் தாக்கியதால் பரபரப்பு#kanniyakumari | #temple pic.twitter.com/Dbk7NxUFCT
— Thanthi TV (@ThanthiTV) December 12, 2025
அப்போது அருள் வந்து ஆடிய ஒருவர் மற்றொரு ஆடிய நபரை திடீரென தாக்கி அவரை தரத்தரவன தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றார். இது அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
