மும்பையில் கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், பாதுகாப்பு ஊழியர் ஒருவரைத் தெருநாய் ஒன்று தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிசம்பர் 11, வியாழக்கிழமை காலை சுமார் 9.40 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது. சிசிடிவி காட்சியில், சீருடையில் இருந்த பாதுகாவலர் பள்ளி கேட் அருகே நடந்து செல்லும் போது, ஒரு தெருநாய் திடீரென அவர் மீது பாய்ந்து, அவரது தோள்பட்டையைக் கடித்துத் தொங்குவது தெளிவாகத் தெரிகிறது.

​பாதுகாவலர் போராடி நாயிடமிருந்து விலகிச் செல்கிறார். உடனே, அவரது சக ஊழியர் ஒரு குச்சியுடன் அங்கு வந்து பார்க்கிறார். அப்போது, அதே நாய் மீண்டும் ஆவேசத்துடன் அவர்களைத் தாக்க ஓடி வருகிறது. குச்சியுடன் இருந்த ஊழியர் நாயின் தலையில் அடித்து, இரண்டாவது தாக்குதலைத் தடுக்கிறார். இந்தத் தாக்குதல் சம்பவம், தெருநாய்களின் தொல்லை காரணமாகப் பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.