தெருவோர பானிப்பூரி கடை ஒன்றில் பெண்கள் கூட்டம் அலைமோதும் காட்சி சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. பொதுவாக டீ கடைகள் அல்லது தெருவோர உணவகங்களில் பெண்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நின்று பேசிச் சிரித்தபடி உணவருந்துவது அரிது. ஆனால் இந்த பானிப்பூரி கடையில் மட்டும் பெண்கள் சிரித்தபடி சுதந்திரமாக பானிப்பூரியை ருசித்து வருகின்றனர்.
இதற்கு காரணமாக, அந்த கடையில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான பெயர்பலகை அமைந்துள்ளது. ‘ஆண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது’ என்று எழுதப்பட்டிருப்பதால், பெண்கள் தங்களை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
‘Boys not allowed’ on a pani puri stall.
Bhai log, we are not even losing rights anymore,
We’re losing snacks 😭💀🔥 pic.twitter.com/nWobjsqiCz— Jeetendra Rana (@R9a0n6a4) December 11, 2025
இந்த காட்சியை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததையடுத்து, அந்த கடை மேலும் பிரபலமானது. பலரும் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், சில ஆண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கருத்துகளும் பதிவாகியுள்ளன. ‘பானிப்பூரி விற்பவரே ஒரு ஆண்தானே’ என ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்று, சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றது.
