விஜய் நடிப்பில், கே.வி.என் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வருவதால், சென்னை, செங்கல்பட்டு போன்ற சில மாவட்ட விநியோகஸ்தர்கள் இப்படத்தை வாங்குவதில் தயக்கம் காட்டியதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், படக்குழுவினர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் முக்கியப் பகுதிகளான கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றை எஸ். பிக்சர் நிறுவனமும், மதுரை, திருச்சி, சேலத்தை 5 ஸ்டார் நிறுவனமும் வெளியிடுகிறது.
தலைநகர் சென்னையில் சினிமாக்காரன் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் எஸ்.எஸ்.ஆர் நிறுவனம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட உள்ளது.
