நவரச நாயகன்’ நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், சமீபத்தில் தந்தையைப் பற்றி எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார். “அப்பாவை பற்றி பொதுத் தளத்தில் பேசுவது வருத்தம் அளிக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் பிரச்சினைகளை நேரடியாகப் பேசியிருக்கலாம். ஒருவரின் வலியை வெளிப்படுத்துவதை மதிக்கிறேன், ஆனால் பொதுத்தளத்தை நல்லதற்குப் பயன்படுத்தலாம்,” என்று கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.
அதேபோல், கார்த்திக் வீல் சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பரவி, அவருக்கு உடல்நலக் குறைவு இருப்பதாக வதந்தி கிளம்பியது. இதற்கு விளக்கம் அளித்த கௌதம், “அது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றபோது எடுத்ததுதான். அப்பா நன்றாக இருக்கிறார்,” என்று வதந்தியை மறுத்துள்ளார்.
