சமீபத்தில் நடந்த Spotify Wrapped Event 2025 என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அங்குக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பாட்டியுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனிருத் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த அந்த வயதான பெண்மணி மோனிகா என்ற பாடலுக்கு உற்சாகமாகக் குத்தாட்டம் போடத் தொடங்கினார். இதைக் கவனித்த அனிருத்தும், அந்தப் பாட்டியுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார். பாட்டியின் இந்தத் துறுதுறுப்பான செயலையும், அனிருத்தின் இயல்பான பங்களிப்பையும் பார்த்துச் சுற்றியிருந்தவர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
View this post on Instagram
இந்தச் சுவாரஸ்யமான தருணம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. இசையின் சக்திக்கு வயது ஒரு தடையே அல்ல என்பதை இந்தப் பாட்டியின் நடனம் உணர்த்துவதாக நெட்டிசன்கள் பலரும் தங்கள் அன்பான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
