தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் வில்லனாக ஒருபோதும் யாராலும் நிரப்ப முடியாத இடத்தை விட்டுச் சென்ற மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11). இதையொட்டி, ரகுவரன் மற்றும் நடிகை ரோகிணி தம்பதியரின் மகனான சாய் ரிஷிவரனின் (Sai Rishivaran) குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 2008-ஆம் ஆண்டு மாரடைப்பால் ரகுவரன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் இப்போதுத் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
கடைசியாகத் தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்த ரகுவரன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்படப் பல மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் தனது ஸ்டைலான வில்லன் கதாப்பாத்திரங்கள் மூலம் முரட்டுத்தனமான வில்லன் பிம்பத்தை உடைத்தவர். ரகுவரன் – ரோகிணி ஜோடி 1996-ல் காதல் திருமணம் செய்து, எட்டு வருடங்கள் கழித்து விவாகரத்துப் பெற்றனர்.
இவர்களது மகனான சாய் ரிஷிவரனுக்கு இப்போது 25 வயதாகிறது. தற்போது வைரலாகி வரும் அவரதுப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், சாய் ரிஷிவரன் அப்பாவைப் போலவே இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர். மேலும், தனதுத் தந்தை, தாய் போல இவர் சினிமாவிற்குள் வருவாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
