உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள லால்சஞ்சில், ஒரு பள்ளி ஆசிரியர் தன் கணவரால் நடுவீதியில் தாக்கப்பட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலானதால் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி, பெட்டுவாவைச் சேர்ந்த அந்தப் பள்ளி ஆசிரியை, பள்ளியின் முதல்வருடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த இடத்திற்கு வந்த அவரது கணவர், மனைவியைச் சந்தித்துச் சண்டையிட்டார்.

 

இந்தச் சண்டையின்போது ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் கன்னத்தில் அறைந்து, “நீ அவன் காரில் உட்காருவாயா?” என்று சத்தம் போட்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், பள்ளி நேரத்திற்கு வெளியே நடந்தது போல் தெரிகிறது என்றும், இது முறையற்ற சந்திப்பு என்றும் அப்பகுதியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைக் குறித்து மாவட்டக் கல்வித் துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சந்திப்புப் பணி நேரத்தில் நடந்ததா, பள்ளி விதிகள் அல்லது சேவை விதிமுறைகள் எதுவும் மீறப்பட்டதா என்பதை விசாரணை குழு கண்டறியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து, ஆசிரியை மற்றும் முதல்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.