வாரணாசியைச் சேர்ந்த 30 வயது ராகுல் மிஸ்ரா என்ற இளைஞர், தன் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் ஒரு வீடியோவில், தன் மனைவி தன்னைத் துன்புறுத்துவதாகவும், சுபம் சிங் என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். “நான் வாழ விரும்பினேன்; என் மனைவி மற்றும் மகனை மிகவும் நேசித்தேன். ஆனால் மகனைப் பிரிந்த வலியைத் தாங்க முடியவில்லை,” என்றும் அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டார். தனது மனைவி ஏமாற்றுவதாகவும், தன் மாமியார் இதற்குத் தூண்டுவதாகவும் அவர் வீடியோவில் கூறினார்.

​இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராகுலின் தாயார் அளித்த புகாரின் பேரில், அவரது மனைவி, கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆண் மற்றும் மாமியார் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் (abetment of suicide) காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், ராகுல் அந்த வீடியோவில், சில பெண்களுக்குச் சாதகமான சட்டப் பிரிவுகளைத் திருத்த வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.