முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்திற்கு வரும் டெல்லி தலைவர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எத்தனை திட்டம் போட்டாலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுகவின் கருப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என்றும், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு “Out of Control” தான் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அவர், 1976-ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் கே.கே. ஷாவால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அதேபோல் அமித் ஷாவும் 2026-ஆம் ஆண்டில் திமுகவுக்கு ஒரு ‘ஷாக்’ கொடுத்து ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார் என்று கூறியுள்ளார்.

மேலும், கருப்பு சிவப்புப் படையை எதிர்கொள்ள காவிப்படை தயாராக இருப்பதாகவும், இந்து தர்மத்தை அடக்க நினைப்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது என்றும், இறுதியாக திமுகவின் வாக்குச்சாவடிகள் வெற்றுச் சாவடிகளாக மாறி ஆட்சிக்கு வேட்டு வைப்பதை பார்க்கப் போகிறோம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.