கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வழிமறித்துத் திடீரெனத் தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்தப் பெண் கூச்சலிட்டதால், பைக் ஆசாமி சங்கிலியைப் பறிக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தச் சம்பவம் சங்கிலிப் பறிப்பு முயற்சியாக மட்டும் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறு காரணமாக அந்த நபர் பெண்ணைத் தாக்கினாரா என்ற இரண்டு கோணங்களில் நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தப்பிச் சென்ற அந்த ஆசாமியைத் தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.