சீனாவில், ஒரு பெண் ஷாப்பிங் மாலுக்கு அருகே வந்து, நடுச் சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு, பார்க் செய்யச் சொல்லும் காவலரையும் புறக்கணித்துவிட்டுச் சென்ற நிலையில், அந்தக் கார் தானாகவே இயங்கத் தொடங்கி, பார்க்கிங் இடத்தைத் தேடிச் சரியாகப் பார்க் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தக் காட்சி, பார்ப்பவர்களை வியப்படையச் செய்தாலும், இது ஆட்டோ பார்க்கிங் அசிஸ்ட் (Auto Parking Assist) என்ற அதிநவீன தொழில்நுட்பமாகும். இந்தியாவின் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் மகிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XUV 9S) உள்ளிட்ட மின்சாரக் கார்களிலும் இந்த வசதி உள்ளது.

“>

 

பார்க்கிங் சிக்கல் உள்ள நகரங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஓட்டுநரின் கமெண்ட்டின் பேரில், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் கார் தானாகவே சரியான இடத்தில் பார்க் செய்து கொள்வதால், இது ஓட்டுநர்களின் வசதியை அதிகரித்துள்ளது.