கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) எச்.ஓ. துரை (75), நேற்று  தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மனைவி விபத்தில் உயிரிழந்த நிலையில், மகனுடன் வசித்து வந்த துரை, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு போன்ற பிரச்சினைகளால் அவதியடைந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து குஷ்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வயது மூப்பு மற்றும் தனிமையின் சோகத்தால் மனமுடைந்த முன்னாள் டிஎஸ்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை வரவழைத்துள்ளது.