கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், சுமார் ₹50 லட்சம் கடன் காரணமாக மனைவி சௌந்தர்யாவைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கடன்காரர்கள் நெருக்கவே, கடன் கொடுத்தவர்களில் ஒருவரான ஆனந்தனுடன் சௌந்தர்யாவுக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. கடந்த நவம்பர் 22 அன்று, சௌந்தர்யா தனது 3 வயது மகளுடன் திருச்சிக்குச் சென்றுள்ளார்.

அங்கு, ஆனந்தனுடன் சேர்ந்து தங்கியிருந்தபோது, தன் கள்ளக்காதலனை அப்பா என்று அழைக்கச் சொல்லி குழந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த சௌந்தர்யாவும், ஆனந்தனும் சேர்ந்து குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

குறிப்பாக, குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தக் குழந்தையின் முகத்தில் மாஸ்க் அணிவித்து, வீட்டின் அருகே விட்டுவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.