முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல், இன்று (நவம்பர் 28, 2025) திடீரெனச் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
கடல் உள்வாங்கியதன் காரணமாக, கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தெளிவாகத் தெரிந்தன.
இதைக் கண்ட பக்தர்கள், அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். திருச்செந்தூர் கோவில் மற்றும் அய்யா வைகுண்டர் அவதாரப் பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் இவ்வாறு உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அவ்வப்போது நடப்பதுதான்.
