தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்த புயல் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அதிக மழை காரணமாக தற்போது திருவாரூர் மாவட்டத்திற்கு மதியத்திற்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும் மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் அறிவித்துள்ளார். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இன்று மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
