பிரபல தமிழ் மற்றும் தென்னிந்திய நடிகைகளான அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர் (87), காலமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சரசம்மா நாயர், அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர். அவர் 2014-ஆம் ஆண்டு வரை கேரள மஹிளா காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச் சடங்குகள், திருவனந்தபுரம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரசம்மா நாயரின் மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.