பிரபல ராப் பாடகரான வேடன், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மலையாளத்தில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘நதிவேட்டம்’ உள்ளிட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி பிரபலமான வேடன், தமிழில் ‘சைசன்’ உள்ளிட்ட படங்களிலும் பாடியுள்ளார். இந்நிலையில், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கத்தாரில் நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.