ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர் என்றும், 279 பேரைக் காணவில்லை என்றும் நகரத் தலைவர் ஜான் லீ தெரிவித்துள்ளார்.
Praying for the Hong Kong victims and First Responders 🙏🏾🙏🏾🙏🏾 https://t.co/yT14LBkV6y
— Mari_k3 (@itskiwi_ii) November 27, 2025
“>
மேலும், பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள், அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தீ விபத்து, தை போ மாவட்டத்தில் நடந்தது. கட்டிடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மூங்கில் சாரங்கள் மற்றும் கட்டுமான வலைகள் வழியாகத் தீ வேகமாகப் பரவியதால், அடுத்தடுத்து இருந்த ஐந்து கட்டிடங்கள் பற்றி எரிந்தன.
At least four people have died and several others were injured after a major fire broke out at Wang Fuk Court in Tai Po, Hong Kong, today.
The blaze spread quickly along bamboo scaffolding surrounding the residential blocks.pic.twitter.com/82pVeN0FoK
— Volcaholic 🌋 (@volcaholic1) November 26, 2025
இந்தச் சம்பவம் மாலை நேரத்தில் நடந்து, இரவு ஆக ஆகத் தீயின் வேகம் அதிகரித்ததால், தீயணைப்புத் துறை அபாய எச்சரிக்கையின் உச்சகட்டமான ‘நிலை 5’-ஐ அறிவித்தது. கிட்டத்தட்ட 700 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கட்டுமானங்களில் மூங்கில் சாரம் பயன்படுத்துவது பாதுகாப்பில்லை என்று அரசு முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
