நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த ஹக்கி யுங் லீ (45) என்பவரின் கணவர் 2018-ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.

இந்த நிலையில், அவர் தனது இரண்டு மகள்களான யூனா ஜோ மற்றும் மினு ஜோ ஆகியோருக்கு ஜூஸில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துவிட்டு, தானும் அதைக் குடித்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, இரண்டு மகள்களும் உயிரிழந்திருந்தனர். ஆனால், ஹக்கி யுங் லீக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

மகள்கள் உயிரிழந்ததைக் கண்ட ஹக்கி யுங் லீ, போலீசுக்குப் பயந்து, அந்தச் சடலங்களை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்ததுடன், அங்கிருந்து தென் கொரியாவுக்குத் தப்பி ஓடினார். 2022-ஆம் ஆண்டு அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பின்னரே, இந்தச் சம்பவம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து, தென் கொரியாவில் கைது செய்யப்பட்ட ஹக்கி யுங் லீ, நியூசிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டு, ஆக்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.