ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் உள்ள வாங் பெக் கோர்ட் காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
🔥 inferno in Tai Po, Hong Kong…
13 dead, 15 injured so far…https://t.co/0zZSs0oUgO pic.twitter.com/GBEKLasc6G
— Byron Wan (@Byron_Wan) November 26, 2025
“>
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த இந்தக் குடியிருப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தீ மளமளவென அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
🇭🇰 Breaking: Hong Kong High-Rise Inferno Heartbreaking tragedy in Tai Po: Flames tear through Wang Fuk Court towers, trapping thousands. At least 44 dead including a heroic firefighter 279 still missing. Police arrest 3 for suspected manslaughter. Prayers for the families.… pic.twitter.com/AKcfnWcOID
— DBS Morocco (@dbsmorocco) November 27, 2025
“>
இந்தக் கோரமான தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டடோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, இன்னும்பலர் பேர் மாயமாகி உள்ளனர் என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#HongkongFire
Death climbs higher to 13 +, 28+ injured.
Inflammable materials add to fire like bamboo scaffoldings.
Footages begin to emerge.#Apartment pic.twitter.com/dAqmivFwuA— Dr. Subhash (@Subhash_LiveS) November 26, 2025
“>
