தெற்கு தாய்லாந்தில் தொடரும் கனமழை மற்றும் கோரமான வெள்ளப்பெருக்கால் பல மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல மாவட்டங்களில் வீதிகள், வீடுகள், சந்தைகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள அல்லது கட்டிடங்களின் மேல் தளங்களில் தஞ்சமடைந்துள்ள இந்த அவசரச் சூழலில், வெள்ளத்தில் மூழ்கிய தெருவில் பிரம்மாண்டமான ஒரு பாம்பு நீந்திச் செல்லும் புதிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, அப்பகுதி குடியிருப்பாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
น้ำท่วมก็หนักหนาแล้ว ยังมาเจองูตัวเบ้อเริ่ม ไม่รู้ว่าจงอาจหรือเปล่า!?#น้ำท่วมหาดใหญ่ pic.twitter.com/ll5vj0LPST
— joe black (@joe_black317) November 25, 2025
“>
இடுப்பு ஆழத்திற்கு மேல் உயர்ந்துள்ள வெள்ள நீரில் பெரிய பாம்பு நீந்தி செல்வதைக் காட்டும் இந்த வீடியோ, வெள்ளத்தால் அதன் இயற்கையான வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்திருக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது. இடைவிடாத மழையால் ஏற்கனவே பல மாகாணங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் உயிர்காக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.<a href=”http://
น้ำท่วมก็หนักหนาแล้ว ยังมาเจองูตัวเบ้อเริ่ม ไม่รู้ว่าจงอาจหรือเปล่า!?#น้ำท่วมหาดใหญ่ pic.twitter.com/ll5vj0LPST
— joe black (@joe_black317) November 25, 2025
“>
