ஸ்கூட்டரில் வந்த இரண்டு நண்பர்கள் தொடர்பான ஒரு சிசிடிவி காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், ஸ்கூட்டரை ஓட்டியவர் ஒரு கடை அருகே வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பிக்கும்போது, திடீரெனக் கால் வழுக்கித் தரையில் தலைகுப்புற விழுகிறார். இந்தக் காட்சியைக் கண்டதும் அவரது நண்பர், விழுந்தவருக்கு உதவி செய்யாமல், சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

அவர் சிரித்துக்கொண்டே இருப்பதால், கீழே விழுந்தவர் அவமானத்தில் முகத்தை மூடிக்கொள்கிறார். இறுதியில் கீழே விழுந்தவர் எழுந்து நிற்கிறார். காயங்கள் ஏதுமில்லை, ஆனால் நண்பரின் விடாத சிரிப்பால் அவர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிறார். இந்த வேடிக்கையான காணொளிதான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.