மதுரை, ஆலங்குளம் முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ் (40). எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி காயத்ரிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவருத்தம் அடைந்த காயத்ரி கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மனைவி பிரிந்த சோகத்தில் கோபிராஜ், தனது மகள்கள் யுவஸ்ரீ (10) மற்றும் கனிஷ்கா (5) ஆகியோருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு நீண்ட நேரமாகியும் கோபிராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கூடல்புதூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். மகள்கள் யுவஸ்ரீ, கனிஷ்கா இருவரும் பிணமாகக் கிடந்த நிலையில், கோபிராஜ் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோபிராஜ் தனது இரண்டு மகள்களையும் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தக் குடும்பச் சண்டையின் கொடூரமான முடிவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
