பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது பேரனும், மகள் ஸ்ரீகாந்திமதியின் மகனுமான சுகந்தனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளார். பாமகவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நோக்குடன், சுகந்தனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பை ராமதாஸ் வழங்கியுள்ளார்.
சுகந்தனுக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி, வரும் டிசம்பர் 12-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திச் செல்லும் பொறுப்பை வழங்கும் நோக்கத்துடனேயே ராமதாஸ் இந்த நிர்வாகப் பொறுப்பைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், பாமகவில் அடுத்த தலைமுறையின் அரசியல் பிரவேசம் உறுதியாகியுள்ளது.
