தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, பரப்புரை எனப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதேசமயம், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தனது முன்னிலையில் திமுகவில் இணைத்துள்ளார்.
மாநிலம் முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவையென்று உணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மேற்கு நகரம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த தேமுதிக நகர துணைச் செயலாளர் திரு. ஈஸ்வரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரு.யுவராஜ், திரு.குபேரன்,… pic.twitter.com/iBn8Z77kWZ
— V.Senthilbalaji – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) November 22, 2025
“>
கரூர் தொகுதியின் தேமுதிக நகர துணைச் செயலாளரான யுவராஜ், மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான குபேரன், சந்திரசேகரன், தினேஷ், சசிகுமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களைத் திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த முக்கியப் பிரமுகர்களின் இணைவு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுகவுக்குக் கரூர் மாவட்டத்தில் மேலும் பலத்தைச் சேர்க்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
