தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், மழை எச்சரிக்கையை மனதில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.