நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு செய்தியாளரை ஒருமையில் பேசியது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
‘SIR-ஐ’ பின்பற்றுவதில் மத்திய அரசுக்கு இருக்கும் எதிர்ப்பு, தமிழக அரசுக்கு இல்லை என சீமான் குற்றம் சாட்டியபோது, ஒரு செய்தியாளர் தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவிப்பை அரசு பின்பற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அப்போது ஆவேசமடைந்த சீமான், அந்தச் செய்தியாளரைப் பார்த்து “டேய் உனக்கு அறிவு இல்லையா? பைத்தியக்காரரா?” என்று கேட்டு ஒருமையில் பேசினார்.
#BREAKING | புதுச்சேரியில் செய்தியாளர்களுடன் நாதக தலைவர் சீமான் ஒருமையில் பேசி வாக்குவாதம்..!#Seeman #NTK #Puducherry #Reportersissue #SIR #ElectionCommission #SeemanArgued #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/gEym6XVkXn
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) November 23, 2025
“>
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருமையில் பேசி சீமான் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் பகிரங்கமாகச் செய்தியாளரை ஒருமையில் பேசியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை இவ்வாறு பேசிய சீமானின் நடவடிக்கை, பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் தனது பேச்சால் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்து வரும் சீமான், இந்தப் புதிய சர்ச்சை குறித்து என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
