நட்புக்கு இலக்கணமாகப் பல சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள ஒரு காணொளி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஒருவர் தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகக் கைவிலங்குடன் (Handcuffs) வந்து, காவல்துறையின் கண்காணிப்புக்கு மத்தியிலும் மகிழ்ச்சியுடன் நடனமாடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணங்களில் பங்கேற்கப் பலரும் காரணங்கள் சொல்லித் தவிர்த்து வரும் இந்தக் காலத்தில், நட்புக்காகச் சட்ட வரம்புகளைத் தாண்டி ஒரு நபர் செயல்பட்ட விதம் குறித்துப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்த வைரல் காணொளியில், ஒரு கையில் கைவிலங்குடன் இருக்கும் அந்த நபர், அதன் சங்கிலியைப் பிடித்தபடி அருகில் நிற்கும் காவல்துறை அதிகாரிக்கு மத்தியிலும், திருமண மேடையின் அருகே நின்று உற்சாகமாக நடனமாடுகிறார்.

“>

 

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவரும் தகவல் என்னவென்றால், சிறையில் இருக்கும் அந்த நபருக்கு, தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகச் சில மணி நேரங்களுக்கு நீதிமன்றக் காவல் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குறுகிய நேரத்தில், தனது நண்பனின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் மேடையில் நின்று மனம் திறந்து நடனமாடியுள்ளார்.

காவல்துறை அதிகாரி அவருக்கு மிக அருகில், கைவிலங்கின் சங்கிலியைப் பிடித்தவாறே நின்றிருந்தபோதும், அவர் தனது நண்பனுக்காகத் தயக்கமின்றி நடனமாடியுள்ளார். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் காணொளியாகப் பதிவு செய்ய, அது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும், “இவர்தான் உண்மையான நண்பன்”, “நட்புக்காக எல்லையைக் கடந்தவர்” என்று நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.